Sunday, November 29, 2009

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை

51. அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை

(தில்லையில் அருளியது)

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 650

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 651

-  மாணிக்கவாசகர், திருவாசகம்,
see
http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0003_02.html

Saturday, November 28, 2009

அற்றது பற்றெனில் உற்றது வீடு

அற்றது பற்றெனில் உற்றது வீடு

2806
அற்றது பற்றெனில்--உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில்--அற்றிறை பற்றே. 1.2.5

2807
பற்றில னீசனும்--முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன்--முற்றி லடங்கே. 1.2.6

2808
அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே. 1.2.7


2809
உள்ள முரைசெயல்--உள்ளவிம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை--யுள்ளிலொ டுங்கே. 1.2.8

2810
ஒடுங்க அவன்கண்--ஒடுங்கலு மெல்லாம்
விடும்பின்னு மாக்கை--விடும்பொழு தெண்ணே. 1.2.9

2811
எண்பெருக் கந்நலத்து--ஒண்பொரு ளீறில
வண்புகழ் நாரணன்--திண்கழல் சேரே. (2) 1.2.10

2812
சேர்த்தடத் தென்குரு--கூர்ச்ட கோபன்சொல்
சீர்த்தொடை யாயிரத்து--ஓர்த்தவிப் பத்தே. (2) 1.2.11 

- திருவாய்மொழி, நம்மாழ்வார்
Ref
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0008_01.html

Thursday, November 26, 2009

mgrsongs.blogspot.com

Excellent page with lyrics in Tamil for  a lot of MGR songs

http://mgrsongs.blogspot.com/

Wednesday, November 25, 2009

Whatever We Think About

Whatever we Think about, Thank about, we Bring about

- Quoted by Praba on 90.1FM, itsdiff.com, Stanford Radio, on 11/25/09, Thanksgiving Special

Tuesday, November 24, 2009

அம்மாடி பொன்னுக்கு தங்க மனசு

அம்மாடி பொன்னுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன மனசு
கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு

- கண்ணதாசன், 1970,  ராமன் எத்தனை ராமனடி

Monday, November 23, 2009

காறைபூணும் கண்ணாடிகாணும்

ஐயபுழுதி உடம்பளைந்து  இவள்பேச்சு மலந்தலையாய்
செய்யநூலின் சிற்றாடை செப்பனடுக்கவும் வல்லளல்லள்
கையினில் சிறுதூதையோடு  இவள்முற்றில் பிரிந்துமிலள்
பையரவணைப் பள்ளியானோடு கைவைத்து இவள்வருமே

பொங்குவெண் மணல்கொண்டு சிற்றிலும் முற்றத்திழைக்கலுறில்
சங்குசக்கரம் தண்டுவாள்  வில்லுமல்லது   இழைக்கலுறால்
கொங்கை இன்னம் குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை
சங்கையாகி என்னுள்ளம்  நாள்தொறும் தட்டுளுப்பாகின்றதே

காறைபூணும் கண்ணாடிகாணும்  தன்கையில் வளைகுலுக்கும்
கூறையுடுக்கும் அயர்க்கும்  தங்கொவ்வைச் செவ்வாய்திருத்தும்
தேறித்தேறிநின்று  ஆயிரம்பேர்த் தேவன்திறம் பிதற்றும்
மாறில்மாமணி வண்ணன்மேல்  இவள்மாலுறுகின்றாளே

- பெரியாழ்வார்

Sunday, November 22, 2009

பெண்மை அரசு

நாற்குணமும் நாற்படையா வைம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்குஞ் சிலம்பே யணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை யரசு.

- நளவெண்பா