Wednesday, March 23, 2011

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே
பேதம் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

நானிருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்
அவனிருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார் அதுவும் தெரியல்லே - இப்போ
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் தெரியல்லை
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

தம்பி ஒருவன் வெளியில் நின்று காசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் வந்து கம்பி எண்ணுகிறான்
உண்மை இங்கே கூட்டுக்குள்ளே கலங்கி நிக்ககுதடா - அட
உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு வெளீயில் நிற்குதடா
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா
காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா
கதவு திறந்து பறவை பறந்து பாடிச் செல்லுமடா - அட
என்னத்தச் சொல்வேண்டா தம்பியோ என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

- கவிஞர் கண்ணதாசன், 1962
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
திரைப்படம்: பலே பாண்டியா, பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

Tuesday, March 8, 2011

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்
கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? கண்மணி சுகமா? சொல் என்றாள்
கண்மணி சுகமா சொல் என்றாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள் 
 
குங்குமம் இருந்தது நெற்றியிலே சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
குங்குமம் இருந்தது நெற்றியிலே சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே
தங்கம் போன்ற இதழ்களிலே ஒரு கலக்கம் பிறந்தது வார்த்தையிலே

என்னுயிர்த் தாயே நீயும் சுகமா? என்னுயிர்த் தாயே நீயும் சுகமா?
இருப்பது எங்கே? சொல் என்றேன். அன்னை முகமோ? காண்பது நிஜமோ?
கனவோ? நனவோ? சொல் என்றேன். கனவோ? நனவோ? சொல் என்றேன்.

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? - என் கண்மணி சுகமா? சொல் என்றேன்.

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? கண்மணி சுகமா? சொல் என்றேன்
கண்மணி சுகமா சொல் என்றேன்

வானத்தில் இருந்தே பாடுகிறேன் - எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
வானத்தில் இருந்தே பாடுகிறேன் - எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்
மகளே வாழ்கென வாழ்த்துகிறேன் - நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்

- கவியரசு கண்ணதாசன், காவியத் தலைவி(க்காக), 1970

ஒலி

Monday, January 31, 2011

Sunday, January 30, 2011

நாறுமலர்க் கொம்பர் நடை கற்பதென வந்தாள்

நாறுமலர்க் கொம்பர் நடை கற்பதென வந்தாள்

சீறடிய கிண்கிணி சிலம்பொடு சிலம்ப
வேறுபடு மேகலைகண் மெல்லென மிழற்ற
வேறுபடு கோதைமிசை வண்டு திசைபாட
நாறுமலர்க் கொம்பர் நடை கற்பதென வந்தாள்

- சீவக சிந்தாமணி

பாவை இடைக்கு ஆதாரம் இன்மை அறிந்து

பாவை இடைக்கு ஆதாரம் இன்மை அறிந்து

கொய்த மலரைக் கொடுங்கையினால் அணைத்து
மொய்குழலில் சூட்டுவான் முன்வந்து தையலால்
பாதார விந்தத்தே சூட்டினான் பாவை இடைக்கு
ஆதாரம் இல்லை அறிந்து

- நளவெண்பா

பின்னி வைத்த கூந்தலில்
முல்லை பூவைச் சூடினால்
கன்னி இடை பின்னல் போடுமா
சிறுமின்னல் இடைபூவை தாங்குமா?

- கவியசு, தேன் நிலவில்

மல்லிகை மாமாலை கொண்டு அங்கு ஆர்த்ததும் ஓரடையாளம்.

319 அல்லியம்பூ மலர்க்கோதாய். அடிபணிந்தேன் விண்ணப்பம்
சொல்லுகேன் கேட்டருளாய்  துணைமலர்க் கண்மடமானே.
எல்லியம் போதினிதிருத்தல்  இருந்ததோரிடவகையில்
மல்லிகை மாமாலைகொண்டு  அங்குஆர்த்ததும் ஓரடையாளம்.
- ஸ்ரீ பெரியாழ்வார் அருளிச்செய்த பெரியாழ்வார் திருமொழி,  மூன்றாம் பத்து