Wednesday, March 23, 2011

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே

பேதம் புரியல்லே

பேரெடுத்து உண்மையைச் சொல்லி பிழைக்க முடியல்லே - இப்போ
பீடிகளுக்கும் ஊதுபத்திக்கும் பேதம் தெரியல்லே

பேதம் தெரியல்லே

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

நானிருக்கும் இடத்தினிலே அவன் இருக்கின்றான்
அவனிருக்கும் இடத்தினிலே நான் இருக்கின்றேன்
நாளை எங்கே யாரிருப்பார் அதுவும் தெரியல்லே - இப்போ
நல்லவனுக்கும் கெட்டவனுக்கும் பேதம் தெரியல்லை
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

தம்பி ஒருவன் வெளியில் நின்று காசை எண்ணுகிறான்
நம்பி ஒருவன் சிறையில் வந்து கம்பி எண்ணுகிறான்
உண்மை இங்கே கூட்டுக்குள்ளே கலங்கி நிக்ககுதடா - அட
உருட்டும் புரட்டும் சுருட்டிக் கொண்டு வெளீயில் நிற்குதடா
அட என்னத்தச் சொல்வேண்டா தம்பி என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

மூடருக்கும் மனிதர் போல முகம் இருக்குதடா
மோசம் நாசம் வேஷமெல்லாம் நிறைந்திருக்குதடா
காலம் மாறும் வேஷம் கலையும் உண்மை வெல்லுமடா
கதவு திறந்து பறவை பறந்து பாடிச் செல்லுமடா - அட
என்னத்தச் சொல்வேண்டா தம்பியோ என்னத்தச் சொல்வேண்டா

யாரை எங்கே வைப்பது என்று யாருக்கும் தெரியல்லே - அட
அண்டங்காக்கைக்கும் குயில்களுக்கும் பேதம் புரியல்லே
பேதம் புரியல்லே

- கவிஞர் கண்ணதாசன், 1962
இசை: விஸ்வநாதன் ராமமூர்த்தி
திரைப்படம்: பலே பாண்டியா, பாடியவர்: டி.எம். சௌந்தரராஜன், பி. சுசீலா

Tuesday, March 8, 2011

ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள்

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? கண்மணி சுகமா? சொல் என்றாள்
கண்மணி சுகமா சொல் என்றாள்
ஒரு நாள் இரவு பகல் போல் நிலவு கனவினிலே என் தாய் வந்தாள் 
 
குங்குமம் இருந்தது நெற்றியிலே சிறு குழப்பம் மிதந்தது கண்களிலே

தங்கம் போன்ற இதழ்களிலே ஒரு கலக்கம் பிறந்தது வார்த்தையிலே

என்னுயிர்த் தாயே நீயும் சுகமா? என்னுயிர்த் தாயே நீயும் சுகமா?
இருப்பது எங்கே? சொல் என்றேன். அன்னை முகமோ? காண்பது நிஜமோ?
கனவோ? நனவோ? சொல் என்றேன். கனவோ? நனவோ? சொல் என்றேன்.

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? - என் கண்மணி சுகமா? சொல் என்றேன்.

கண்ணா சுகமா? கிருஷ்ணா சுகமா? கண்மணி சுகமா? சொல் என்றேன்
கண்மணி சுகமா சொல் என்றேன்

வானத்தில் இருந்தே பாடுகிறேன் - எந்த வழியிலும் உன்னைத் தேடுகிறேன்

மகளே வாழ்கென வாழ்த்துகிறேன் - நான் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன் மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்
மறுபடி பிறந்தால் சேர்ந்திருப்பேன்

- கவியரசு கண்ணதாசன், காவியத் தலைவி(க்காக), 1970

ஒலி