Saturday, October 29, 2011

மலரும் வான் நிலவும் சிந்தும் (பெண்)

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

கனவில் தோன்றி சிரித்து சிரித்து நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனவில் தோன்றி சிரித்து சிரித்து நான்
காணும் இடமெங்கும் இருக்கின்றாய்
கனியில் ரசமாய் இனித்து இனித்து என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்
கனியில் ரசமாய் இனித்து இனித்து என்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்
கையில் கிடைக்காமல் மறைகின்றாய்

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை
மயங்கச் செய்வது ன் கேளிக்கையோ?
மனதில் கவிதை வரைந்து வரைந்து என்னை
மயங்கச் செய்வது ன் கேளிக்கையோ?
தனிமைத் துயரில் தவிக்கத் தவிக்க - என்
தலைவா உனக்கிது வேடிக்கையோ?
தலைவா உனக்கிது வேடிக்கையோ?

மலரும் வான் நிலவும் சிந்தும்
அழகெல்லாம் உன் எழில் வண்ணமே
குழலும் யாழிசையும்
கொஞ்சும் ஒலியெல்லாம் உன் குரல் வண்ணமே

-  மகாகவி காளிதாஸ் (திரைப்படம்), 1966
இயற்றியவர்: கவிஞர் கண்ணதாசன்
இசை: கே.வி. மஹாதேவன்
ஆண்டு: 1966