Wednesday, August 7, 2013
தங்க தேரோடும் அழகினிலே இந்த ராசாத்தி - ரகுபதி ராகவ ராசா ராம்
தங்க தேரோடும் அழகினிலே இந்த ராசாத்தி குடி இருந்தாள்
ரகுபதி ராகவ ராசா ராம்
Ragupathi Ragava Rajaram
சங்கர் கணேஷ்
ரகுபதி ராகவ ராசா ராம்
Ragupathi Ragava Rajaram
சங்கர் கணேஷ்
Saturday, August 3, 2013
ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
dinamani news,
By
dn, ஸ்ரீவில்லிபுத்தூர்
First Published : 02 August 2013 01:18 AM IST
ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா: கொடியேற்றத்துடன் தொடக்கம்
By
dn, ஸ்ரீவில்லிபுத்தூர்
First Published : 02 August 2013 01:18 AM IST
விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா வியாழக்கிழமை காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பூமிப்பிராட்டியாம் ஸ்ரீஆண்டாளின் திருஅவதார தினமான ஆடிப்பூர நன்னாளைக் கொண்டாடும் விதமாக ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. விஜயபாஸ்கர பட்டர் கொடியேற்றிவைத்தார். முன்னதாக, ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னாருக்கு விசேஷ பூஜைகள், ஆராதனைகள் நடைபெற்றன. நிகழ்ச்சியில் கோயில் தக்கார் தொழிலதிபர் கி.ரவிச்சந்திரன், ஸ்ரீவில்லிபுத்தூர் நகர்மன்றத் தலைவி வி.செந்தில்குமாரி உள்பட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
12 நாள்கள் நடைபெறும் இத்திருவிழாவில் ஒவ்வொரு நாளும் வெவ்வேறு வாகனங்களில் ஸ்ரீஆண்டாள், ரெங்கமன்னார் புறப்பாடு நடைபெற்று பல்வேறு மண்டபங்களில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிப்பர்.
முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் ஆகஸ்ட் 9 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) காலை 8.05 மணிக்கு நடைபெறுகிறது. அன்றைய தினம் வெளிநாடுகளில் இருந்தும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் பக்தர்களுக்கு பல்வேறு வசதிகளை மாவட்ட நிர்வாகம் விரிவாகச் செய்துள்ளது. ஆகஸ்ட் 5 ஆம் தேதி இரவு ஐந்து கருட சேவை நடைபெறும். ஸ்ரீஆண்டாள் பெரிய அன்ன வாகனம், ஸ்ரீரெங்கமன்னார், ஸ்ரீபெரிய பெருமாள், ஸ்ரீசுந்தரராஜன், ஸ்ரீதிருவேங்கடமுடையான், ஸ்ரீதிருத்தங்கல் அப்பன் ஆகிய எம்பெருமாள்கள் பெரிய திருவடி (கருட) வாகனங்களிலும், ஸ்ரீபெரியாழ்வார் சிறிய அன்ன வாகனத்திலும் எழுந்தருளுவர்.
7ஆம் தேதி இரவு கிருஷ்ணன் கோயிலில் சயன சேவை நடைபெறும். ஸ்ரீஆண்டாள் திருமடியில் ஸ்ரீரெங்கமன்னார் சயனத் திருக்கோலத்தில் பக்தர்களுக்கு காட்சியளிப்பார்.
விழா நாள்களில் கோயில் முன்பு உள்ள பிரமாண்டமான பந்தலில் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
http://dinamani.com/religion/article942740.ece?service=print

பரமனை கவர்ந்த பாவை
Author:
- First Published: Aug 6, 2010 12:00 AM
- Last Updated: Sep 20, 2012 8:04 AM
"எழிலுடைய வம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர் குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில் எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய கழல்வளையத் தாமும் கழல்வளையே யாக்கினரே'' - என்று ஆண்டாள், நாச்சியார் திருமொழியில் பாட
"எழிலுடைய வம்மனைமீர்! என்னரங்கத் தின்னமுதர்
குழலழகர் வாயழகர் கண்ணழகர் கொப்பூழில்
எழுகமலப் பூவழக ரெம்மானார் என்னுடைய
கழல்வளையத் தாமும் கழல்வளையே யாக்கினரே''
- என்று ஆண்டாள், நாச்சியார் திருமொழியில் பாடியுள்ளார். இப்பாசுரம் மிகச் சிறப்பு வாய்ந்ததாகும். தமிழ் மொழியின் சிறப்பெழுத்தான, "ழகரம்'
இப்பாசுரத்தில் பத்து இடங்களில் வருகிறது.
ஸ்ரீ ரங்கனின் அழகை வர்ணிப்பதில் ஆண்டாளுக்கு அளப்பரிய பேரின்பம் உண்டு. அதனால், "கோதை தமிழ் கொஞ்சும் தமிழ்' என்பார் பெரியோர்.
ஆண்டாள், போக வடிவத்தில் அவதரித்தாள். ஆனந்தத்தின் வடிவமே அவள். "உலக உயிர்கள் அனைத்தும் பேரின்பத்தை நுகர வேண்டும்; இந்த
ஜீவாத்மா பரமாத்மாவை அடைய வேண்டும்' என்பதையே ஆண்டாள் தன் பாடல்களில் வலியுறுத்துகிறாள். ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைந்துள்ள ஸ்ரீ
ஆண்டாள் கோயில், சூடிக் கொடுத்த சுடர்க்கொடியான அந்தத் தெய்வ மங்கை வாழ்ந்த திருமாளிகையே ஆகும்.
ஸ்ரீஆண்டாள் கோயிலில் விழாக்கள் அதிகம். இங்கு ஆடிப்பூரத்தையொட்டி நடக்கும் (நாளது ஆகஸ்டு,12) உற்சவமே பிரம்மோற்சவம் ஆகும்.
வைகாஸன முறைப்படி இங்கே திருவிழா நடக்கிறது.
ஒரிஸ்ஸôவில் உள்ள "புரி' என்ற திருத்தலத்தில் 3 தேர்கள் உள்ளன. அதுபோல் இங்கும் உண்டு. முதல் நாள் உற்சவத்தில் இடம் பெறும் 16 கால்
சப்பரத்தேர் என்பது, அன்றே தயாராகி அத்தினமே உலா வரும் சிறப்புடையது. (விழா நாள்: 4.8.10). முன்பு தஞ்சாவூரில் இருந்து கலைஞர்கள் வந்து
பனையோலைகளால் இத்தேரினைச் செய்வார்களாம். அத்தேர் மிகப் பிரமாண்டமாக இருக்குமாம். கால மாற்றத்தின் காரணமாக இப்போது, வண்ணத்
துணிகளால் அலங்காரம் செய்யப்படுகிறது. இத்தேர் இரவு 10 மணியளவில் வீதி உலா வரும். கண்ணைக் கவரும் தேரும், அதில் பவனி வரும் இறைத்
தம்பதியினரும் பூவுலகில் வைகுண்டத்தைக் காட்டுவார்கள். இவர்களை வணங்கினால் வாழ்க்கைக்கு வேண்டிய பதினாறு செல்வமும் கிடைக்கப்
பெறும்.
ஒவ்வொரு நாளும் வெவ்வேறு அலங்காரத்தில் ஆண்டாளும், ஸ்ரீரங்கமன்னாரும் தரிசனம் தந்தாலும் ஐந்து, ஏழு, ஒன்பதாம் நாள் திருவிழாக்கள்
முக்கியத்துவம் பெற்றதாகக் கருதப்படுகின்றன.
ஐந்தாம் திருநாள்
இத்தினம் ஐந்து கருடசேவை நடைபெறும். ஸ்ரீரங்கமன்னார், ஸ்ரீ பெரிய பெருமாள், ஸ்ரீசுந்தரராஜன், திருவேங்கமுடையான், ஸ்ரீதிருத்தங்கல் அப்பன்
ஆகிய ஒவ்வொரு பெருமாளையும் ஆண்டாளின் தந்தையான பெரியாழ்வார் வரவேற்கும் அழகும், பெரியாழ்வாருக்கு அவர்கள் பதில் மரியாதை
செய்வதும் தனி அழகு. இந்த உற்சவம் காலை 10 மணியளவில் நடைபெறும். (இவ்வருடம் 8.8.10).
அன்றிரவு 10 மணிக்கு அத்தனைப் பெருமாள்களும் கருட வாகனத்தில் எழுந்தருள்வார்கள். பெரியாழ்வாரும், ஆண்டாளும் அன்ன வாகனத்தில்
பவனி வருவார்கள். இந்தத் திருவிழாவில் சதுரகிரிப் பக்தர்களும் சேர்ந்து கொள்ள, மக்கள் வெள்ளம் கரை புரண்டோடும்.
ஏழாம் திருநாள் (10.8.10) சயன சேவை. பாற்கடலில் பள்ளி கொண்டிருக்கும் அந்தப் பரந்தாமன், அன்று பாவையின் மடியில் பள்ளி கொண்டபடி
பவனி வருவான். நமது இல்லறத்தை இனிமையாக்கத் தம்பதிகள் நமக்கு இப்படித் தரிசனம் தருகின்றனர்.
ஒன்பதாம் திருநாள் (12.8.10) ஸ்ரீஆண்டாள், அந்த ஆனந்த தேவதை, அழகுத் தேவதை, அன்புத் தேவதை அவதரித்த மிகப் புனிதமான நாள். சூடிக்
கொடுத்த பூமாலையாலும், பாடிக் கொடுத்த பாமாலையாலும் பரமனையே கவர்ந்தவள் அந்தப் பாவை. அவளும் பரந்தாமனும் சேர்ந்து மிகப் பெரிய
தேரில் பவனி வர, நாம் அவர்களுக்குப் பல்லாண்டு பாடிப் பணிந்து ஆசியையும், அருளையும் பெறலாம். வாரீர்!
- வெ. புனிதாவெள்ளை

Copyright © 2012, The Dinamani.com. All rights reserved.
ஸ்ரீஆண்டாளுக்கு ஸ்ரீகள்ளழகர் டாலருடன் கூடிய செயின்: நடனக் கலைஞர் உபயம்
By
dn, ஸ்ரீவில்லிபுத்தூர்
First Published : 02 August 2013 01:19 AM IST
ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீஆண்டாள் அணிந்து
கொள்வதற்காக ரூ.5 லட்சம் மதிப்பில் 20 பவுன் எடையுள்ள ஸ்ரீகள்ளழகர்
டாலருடன் கூடிய செயின் வியாழக்கிழமை உபயமாக வழங்கப்பட்டது.
இதனை உபயமாக வழங்கிய சென்னையைச் சேர்ந்த நடனக் கலைஞர் ஜாகீர் உசேன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: கடந்த 4 ஆண்டுகளாக இந்தக் கோயிலுக்கு வந்துகொண்டிருக்கிறேன். ஸ்ரீஆண்டாளுக்கு, ஸ்ரீரங்கம் ரங்கநாதர் டாலருடன் கூடிய செயின், திருப்பதி திருவேங்கடமுடையான் டாலருடன் கூடிய செயின் தற்போது உள்ளது. ஆனால், மதுரை கள்ளழகர் டாலர் செயின் மட்டும் இல்லை என்று பட்டாச்சாரியார் ஒருவர் என்னிடம் தெரிவித்தார்.
அவர் கூறியதை, ஸ்ரீஆண்டாள் கூறியதாகவே ஏற்றுக்கொண்டு, ஸ்ரீகள்ளழகர் டாலருடன் கூடிய ரூ.5 லட்சம் மதிப்பிலான 20 பவுன் செயினை உபயமாக வழங்கியுள்ளேன் என்றார் ஜாகீர் உசேன். இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் ஸ்ரீஆண்டாளை 24 நான்கு மணி நேரமும் நினைத்து வாழ்வதாகவும் தெரிவித்தார் ஜாகீர் உசேன்.

Subscribe to:
Posts (Atom)