கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர் சோதி மணி மாடம் தோன்றும் ஊர்-நீதியால் நல்லபத்தர் வாழும்ஊர் நான்மறைகள் ஓதுமூர் வில்லிபுத்தூர் வேதக் கோனூர் பாதகங்கள் தீர்க்கும் பரமன் அடிகாட்டும் வேதம் அனைத்துக்கும் வித்தாகும்-கோதை தமிழ் ஐயைந்தும் ஐந்தும் அறியாத மானிடரை வையம் சுமப்பது வம்பு திருவாடிப் பூரத்துச் செகத்துதித்தாள் வாழியே திருப்பாவை முப்பதும் செப்பினாள் வாழியே பெரியாழ்வார் பெற்றெடுத்த பெண்பிள்ளை வாழியே பெரும்புதூர் மாமுனிக்குப் பின்னானாள் வாழியே ஒருநூற்று நாற்பத்தொரு மூன்றுரைத்தாள் வாழியே உயரரங்கற்கே கண்ணி யுகந்தளித்தாள் வாழியே மருவாரும் திருமல்லி வளநாடி வாழியே வண்புதுவை நகர்க்கோதை மலர்ப்பதங்கள் வாழியே. ஆண்டாள் திருவடிகளே சரணம்
Monday, December 19, 2016
கோதை பிறந்த ஊர் கோவிந்தன் வாழுமூர்
Sunday, December 4, 2016
Sunday, November 20, 2016
Subscribe to:
Posts (Atom)