பால் தமிழப்பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் சிரிப்பால்
சுவை அறிந்தேன்
பால் மனம்பால்
என்ற மதிப்பால்
தந்த அழைப்பால்
உடல் அணைப்பால்
சுகம் தெரிந்தேன்
உந்தன் பிறப்பால்
உள்ள வனப்பால்
வந்த மலைப்பால்
கவி புனைந்தேன்
அன்பின் விழிப்பால்
வந்த விருப்பால்
அன்பின் விழிப்பால்
வந்த விருப்பால்
சொன்ன உவப்பால்
மனம் குளிர்ந்தேன்
விழிச் சிவப்பால்
வாய் வெளுப்பால்
விழிச் சிவப்பால்
வாய் வெளுப்பால்
இடை இளைப்பால்
நிலை புரிந்தேன்
இன்பத் தவிப்பால்
மனக் கொதிப்பால்
இன்பத் தவிப்பால்
மனக் கொதிப்பால்
கண்ட களைப்பால்
நடை தளர்ந்தேன்
முத்துச் சிரிப்பால்
முல்லை விரிப்பால்
முத்துச் சிரிப்பால்
முல்லை விரிப்பால்
மொழி இனிப்பால்
என்னை இழந்தேன்
இந்த இணைப்பால்
கொண்ட களிப்பால்
இந்த இணைப்பால்
கொண்ட களிப்பால்
தொட்ட சிலிர்ப்பால்
தன்னை மறந்தேன்
பால் தமிழ்ப்பால்
எனும் நினைப்பால்
இதழ் துடிப்பால்
அதன் சிரிப்பால்
சுவை அறிந்தேன்
-கவியரசு கண்ணதாசன்
படம்: ரகசிய போலீஸ் 115, 1968
For more MGR Song Lyrics see http://mgrsongs.blogspot.com/
Sunday, May 2, 2010
Subscribe to:
Post Comments (Atom)
வரிகள் வாலி
ReplyDelete