Sunday, June 6, 2010

பொன்னென்றும் பூவென்றும் - நிலவே நீ சாட்சி - க்ண்ணதாசன் - 1970 - MSV - SPB

சொன்னவர்க்கே சரண் நாங்களே
--------------------------------------------
ம்ம்ம்ம்ம் ஆஹாஆஆஆஆ

பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ ஓஓஓஒ

பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப்பார்த்தால் சொல்லத்தோன்றும்
இன்னும் நூறாயிரம் ம்ம்ம்ம்ம்ம்
இன்னும் நூறாயிரம் ...

மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து
மூன்று கனிச்சாறு ஒன்றாக பிழிந்து
மோக ரசம் கொஞ்சம் அளவோடு கலந்து

போதை மதுவாக பொன்மேனி மலர்ந்து
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து
பூவை வந்தாள் பெண்ணாக பிறந்து

பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப்பார்த்தால் சொல்லத்தோன்றும்
இன்னும் நூறாயிரம் ம்ம்ம்ம்ம்ம்

கோடை வசந்தங்கள் குளிர்காலம் என்று
ஓடும் பருவங்கள் கணநேரம் நின்று
காதல் கவி பாடும் அவள் மேனி கண்டு
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று
காண கண் வேண்டும் ஒரு கோடி இன்று

கன்னி இளம் கூந்தல் கல்யாண பள்ளி
கண்கள் ஒளி வீசும் அதிகாலை வெள்ளி
கன்னி இளம் கூந்தல் கல்யாண பள்ளி
கண்கள் ஒளி வீசும் அதிகாலை வெள்ளி
தென்றல் விளையாடும் அவள் பேரைச்சொல்லி
இன்பம் அவளின்னும் அறியாத கல்வி
இன்பம் அவளின்னும் அறியாத கல்வி

பொன்னென்றும் பூவென்றும்
தேனென்றும் சொல்வேனோ
பெண்ணைப்பார்த்தால் சொல்லத்தோன்றும்
இன்னும் நூறாயிரம் ம்ம்ம்ம்ம்ம்
இன்னும் நூறாயிரம் ...

No comments:

Post a Comment