Wednesday, October 23, 2013

யாருக்கு யார் சொந்தம் நான் சொல்ல வா - மாலை சூட வா

யாருக்கு யார் சொந்தம் நான் சொல்ல வா
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூட வா
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்ல வா
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூட வா

குளிர் கொண்ட மேகம் தானோ  மலர் கொண்ட கூந்தல்
கடல் கொண்ட நீலம் தானோ சுடர் கொண்ட கண்கள்
குளிர் கொண்ட மேகம் தானோ  மலர் கொண்ட கூந்தல்
கடல் கொண்ட நீலம் தானோ சுடர் கொண்ட கண்கள்
மடல் கொண்ட வாழை தானோ மனம் கொண்ட மேனி
மடல் கொண்ட வாழை தானோ மனம் கொண்ட மேனி
தழுவாத போது உறக்கங்கள் ஏது?

யாருக்கு யார் சொந்தம் நான் சொல்ல வா
எனகென்றும் நீயே சொந்தம் மாலை சூட வா

கல்யாண மேளம் கேட்கும் நாளெந்த நாளோ?
கச்சேரி ராகம் பாடும் பொழுதென்ன  பொழுதோ?
கல்யாண மேளம் கேட்கும் நாளெந்த நாளோ?
கச்சேரி ராகம் பாடும் பொழுதென்ன  பொழுதோ?
முதல் முதல் பார்க்கத் தோன்றும் இரவெந்த இரவோ?
அலை பாயும் உள்ளம் அணைத் தாண்டி செல்லும்

யாருக்கு யார் சொந்தம் நான் சொல்ல வா
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூட வா
யாருக்கு யார் சொந்தம் நான் சொல்ல வா
எனக்கென்றும் நீயே சொந்தம் மாலை சூட வா

No comments:

Post a Comment