ராஜ ராஜ ஸ்ரீ ராணி வந்தாள் ராஜ போகம் தர வந்தாள்
கண்ணொரு பாவனை கையொரு பாவனை சிந்த
கன்னமிரண்டு இன்னொரு ரகசியம் சொல்ல
ராஜராஜஸ்ரீ ராஜன் வந்தான் ராஜ போகம் தர வந்தான்
தேடிச் சென்ற பூங்கொடி காலில் பட்டது
சிந்தும் முத்தத்தால் என்னைப் பின்னிக் கொண்டது
பின்னிக் கொண்ட பூங்கொடி தேனைத் தந்தது
தேனைத் தந்ததால் இன்ப ஞானம் வந்தது
ஞானம் ஒன்றல்ல பிறந்த கானம் ஒன்றல்ல
எழுந்த ராகம் ஒன்றல்ல இணைந்த தாளம் ஒன்றல்ல
ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல
(கண்ணொரு)
மேகம் வந்த வேகத்தில் மோகம் வந்தது
மெல்ல மெல்ல நாணத்தில் தேரும் வந்தது
கன்னிப் பெண்ணின் மேனியில் மின்னல் வந்தது
காதல் என்பதோர் மழை வெள்ளம் வந்தது
பெண்ணும் பெண்ணல்ல இணைந்த கண்ணும் கண்ணல்ல
மலர்ந்த பூவும் பூவல்ல அமர்ந்த வண்டும் வண்டல்ல
ஊடல் கொண்டு கூடல் கொண்ட பாடல் ஒன்றல்ல
இடையொரு வேதனை நடை ஒரு வேதனை கொள்ள
இதழொரு பாவமும் முகமொரு பாவமும் சொல்ல
(ராஜராஜஸ்ரீ)
- கண்ணதாசன், 1967, திரைப்படம் - ஊட்டி வரை உறவு
Friday, February 5, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment