Saturday, February 27, 2010

இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்

இளமை கொலுவிருக்கும் இனிமை சுவையிருக்கும்
இயற்கை மணமிருக்கும் பருவத்திலே - பெண்
இல்லாமல் சுகமில்லை உலகத்திலே

(இளமை)

அணைத்து வளர்ப்பவளூம் தாயல்லவோ
அணைப்பில் அடங்குவதும் அவளல்லவோ
புலவர் பாடுவதும் கவிஞர் நாடுவதும்
கலைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ - பெண்
இயற்கையில் சீதனப் பரிசல்லவோ

(இளமை)

பொன்னும் பொருளும் வந்து மொழி சொல்லுமா - ஒரு
பூவைக்கு மாலையிடும் மணம் வருமா
இன்று தேடி வரும் நாளை ஓடி விடும்
செல்வம் சிரித்தபடி அமுதிடுமா - எந்தச்
செல்வமும் பெண்மையின் சுகம் தருமா

(இளமை)
- கண்ணதாசன், 1962

படம் : ஹலோ மிஸ்டர் ஜமீந்தார்
குரல் : சுசீலா
இசை : வி- ரா
நடிகை : சாவித்திரி

நன்றி: சந்த்ரு
http://psusheela.org/tam/show_lyrics.php?id=687

3 comments:

  1. இப்பாடல் P.B சீனிவாஸ் அவர்கள் பாடிய பாடலல்லவா?

    ReplyDelete
  2. பாடல் சுசீலா அம்மா குரலில் ஒரு பாடலு, சீனிவாஸ் குரலில் இன்னொரு பாடலும் இருக்கின்றது.
    நன்றி
    -மின்னல்

    ReplyDelete
  3. கவிஞர் பாடுவதும், கலைஞர் நாடுவதும்,
    இளைஞர் தேடுவதும் பெண்ணல்லவோ ....

    ReplyDelete