Sunday, February 14, 2010

மௌனம்

பார்க்க
http://www.thannambikkai.net/2005/06/01/2885/

மௌனம் என்பது வரம்

- Author: பேராசிரியர் டாக்டர். பி.கி. சிவராமன்,  Jun 2005

மோனம் என்பது ஞான வரம்பு
- ஔவையார்

சும்மா இரு சொல்லற என்றதுமே
அம்மா பொருள் ஒன்றும் அறிந்திலனே
- அருணகிரிநாதர், கந்தர் அனுபூதி

பிள்ளை மதி செஞ்சடையான்,
பேசாப்பெருமையினான்
- தாயுமானவர், தன்  மௌன குருவைக் குறித்து


நீதி நடஞ்செய், ஏரின்ப நிதி, அதை ஓதி முடியாது
- வள்ளலார்

தன்னை அறிந்து இன்பமுற வெண்ணிலாவே!
ஒரு தந்திரம் நீ சொல்ல வேண்டும் வெண்ணிலாவே
-  வள்ளலார்

நற்பூதி அணிந்த திருவடிவம் முற்றும் தோழி,
நான் கண்டேன்! நான் புணர்ந்தேன்! நான் அது ஆனேன்!
-  வள்ளலார்

வாக்கு இறந்த பூரணம் சொல்லாமல் சொன்னவன்
- திருவிளையாடல் புராணம்

 ஓம் என்ற பிரணவத்தை = அ+உ+ம் என பிரிக்கலாம். (அ) அறிவாக, உள்ள இறைவனை, (உ) உயிராக உணர்கிற மனிதன், (ம்) பேரின்ப நிலையாகிய மௌனத்தில் ஆழ்கிறான் என்பது பிரணவப் பொருள்.

மௌனம் அனுசரிப்பது எவ்வளவு கடினம் என்பதைப் பற்றி ஒரு கதையுண்டு. மூன்று துறவிகள் மௌனம் இருந்தனர். ஐந்து நிமிடங்கள் ஆயிற்று. முதல் துறவி மற்றொரு துறவியின் முகத்தில் கரித்தூளைக் கண்டார். “உன் முகத்தில் கரி” என்றார். இரண்டாம் துறவி “நீ பேசிவிட்டாய்” என்றார். மூன்றாம் துறவி “நான் மட்டும்தான் பேசவில்லை” என்றார். தமிழன்பனின் உள்ளொலியை மௌனமாக்க்கேளுங்கள். உன் வார்த்தைகளிலேயே மிக அழகானது எது? உதடு திறகாமல் பதில் சொன்னது மொழி. ஓசை இல்லாமல் பதில் சொன்னது மொழி, வார்த்தை இல்லாமல் பதில் சொன்னது மொழி.

No comments:

Post a Comment