எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடுஎங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
என் கண்ணோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
வாசலிலே உன் காலடி ஓசை கேட்டிருப்பேன்
வந்தவுடன் உன் ஆசை முகத்தைப் பார்த்திருப்பேன்
கண்ணில் நீரைக் காணாமல்
கவலை ஏதும் கூறாமல்
என்னை எண்ணி வாழாமல்
உனக்கென நான் வாழ்வேன்
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்
காலம் வரும் என் கனவுகள் எல்லாம் கனிந்து வரும்
காத்திருப்பேன் என் பாதையில் தெய்வம் இணைந்து விடும்
காதல் என்றால் சேயாவேன்
கருணை என்றால் தாயாவேன்
கண்ணா உந்தன் நிழலாவேன்
உனக்கென நான் வாழ்வேன்
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
அதைத் தானே கொண்டு வந்தேன் நான் என்னோடு
எங்கே நீயோ நானும் அங்கே உன்னோடு
- கண்ணதாசன், 1967
பாடல்: எங்கே நீயோ நானும் அங்கே
திரைப் படம்: நெஞ்சிருக்கும் வரை
பாடியவர்: பி.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
நடிகை: கே.ஆர்.விஜயா
Sunday, March 14, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment