Wednesday, March 10, 2010

எங்கேயோ பார்த்த முகம்

எங்கேயோ பார்த்த முகம்
எங்கேயோ பார்த்த முகம்

இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்
இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்
புதுநிலவோ பூச்சரமோ
மதுமலரோ மாணிக்கமோ
எங்கேயோ பார்த்த முகம்
எங்கேயோ பார்த்த முகம்

எழுந்தே நடந்தாள் மயில் தான் இவளோ
கனிவாய் மொழிந்தால் குரல் தான் குயிலோ
கலைக்கொரு கோவில் இவள் தானோ
கலைக்கொரு கோவில் இவள் தானோ

ஊர்வசியோ மேனகையோ
வான் பிறையோ தாரகையோ
இரு விழி மேடையில் எழுதிய ஓவியம்
புது நிலவோ பூச்சரமோ
மதுமலரோ மாணிக்கமோ

எங்கேயோ பார்தத முகம்
எங்கேயோ பார்த்த முகம்

நிழல் போல் குழல் தான்
குடை போல் அமைய
தளிர்பூங்கொடி போல் இடை தான் அசைய
வளைகரம் ஆட வருவாளோ
வளைகரம் ஆட வருவாளோ

ஊர் மயங்கும் பேரழகோ
ஓடிவரும் தேர் அழகோ
இருவிழி மேடையில் எழுதிய ஓவியம்
புது நிலவோ பூச்சரமோ
மதுமலரோ மாணிகமோ

எங்கேயோ பார்த்த முகம்
எங்கேயோ பார்த்த முகம்

- கண்ணதாசன், 1969
படம்: நில் கவனி காதலி
இசை: எம்.எஸ்.வி
பாடியவர்கள்: பி.பி.ஸ்ரீனிவாஸ், எல்.ஆர்.ஈஸ்வரி

No comments:

Post a Comment