நீ வருவாய் என நான் இருந்தேன்(கண்ணதாசன், 1980, படம்: சுஜாதா)
அந்தரங்க நீர்க்குளத்தே
பூத்திருந்த தாமரைகள்
அந்தியிலே மொட்டாகி
சிந்தையிலே கோலமிட்டதோ
காதலிலே நீர்வேட்டை
காற்றினிலே மாளிகைகள்
வானகத்து வீதியினிலே
வலம்போகும் கற்பனைகள்
நான் அவரை பார்த்துவிட்டேன்
அத்தனையும் கனவுகளே
—
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
கண்கள் உறங்கவில்லை இமைகள் தழுவவில்லை
கவிதை எழுத ஒரு வரியும் கிடைக்கவில்லை
அமைதி இழந்த மனம் எதையும் நினைக்கவில்லை
வாராயோ….
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
அடிதேவி உந்தன் தோளில்
புதுபூவானால் இன்று
(அடிதேவி உந்தன் தோளில்
புதுபூவானால் இன்று)
அடிதேவி உந்தன்தோழி
ஒருதூதானாள் இன்று
இரவெங்கே உறவெங்கே
உனைக் காண்பேனோ என்றும்
இரவெங்கே உறவெங்கே
உனைக் காண்பேனோ என்றும்
அமுத நதியில் தினமும் என்னை நனையவிட்டு
இதழை மறைத்துக் கொண்ட இளமை அழகுசிட்டு
தனிமை மயக்கம்தனை விரைவில் தணிப்பதற்கு வாராயோ?
நீ வருவாய் என நான் இருந்தேன்
ஏன் மறந்தாய் என நான் அறியேன்
ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
ஒரு மேடை ஒரு தோகை
அது ஆடாதோ கண்ணே
குழல்மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை?
குழல்மேகம் தரும் ராகம்
அது நாடாதோ என்னை?
சிவந்த முகத்தில் ஒரு நகையை அணிந்து கொண்டு
விரிந்த புருவங்களில் அழகை சுமந்து கொண்டு
எனது மடியில் ஒரு புதிய கவிதை சொல்ல வாராயோ?
கண்ணதாசன், 1980, படம்: சுஜாதா
அம்மம்மா! அற்புதம்!
Thursday, November 18, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment