தேவன் கோவில் மணி ஓசை - நல்ல
சேதிகள் சொல்லும் மணி ஓசை
பாவிகள் மீதும் ஆண்டவன் காட்டும்
பாசத்தின் ஓசை மணி ஓசை
(தேவன்)
ஊரார் வெறுத்தால் உலகம் பழித்தால்
உதவும் கோவில் மணி ஓசை
தாயார் வடிவில் தாவி அணைத்தே
தழுவும் நெஞ்சில் மணி ஓசை
இது உறவினை கூறும் மணி ஓசை
இவன் உயிரினை காக்கும் மணி ஓசை
(தேவன்)
அருமை மகனே என்றொரு வார்த்தை
வழுங்கும் கோவில் மணி ஓசை
அண்ணா அண்ணா என்றோர் குரலில்
அடங்கும் கோவில் மணி ஓசை
இது ஆசை கிழவன் குரலோசை
அவன் அன்பினை காட்டும் மணி ஓசை
(தேவன்)
- கன்னதாசன், மணி ஓசை, ஆண்டு: ?, சீர்காழி கோவிந்தராஜன்
Wednesday, November 3, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment