Sunday, November 21, 2010

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே  
 

ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்
ரரிரரிரா ரரிரரார ரரிரரிரா ரரிரரா

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
அன்னமே சொர்ணமே அன்றுதான் இந்த ஊர்வலம்
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே

ஆல வட்டம் போடுதடி நெல்லுப்பயிரு
ஆள வட்டம் போடுதடி கள்ளப்பருந்து
மாலயிட போரவன கண்ணில் கலந்து
மங்கை மனம் அலையுதடி மெல்லப்பறந்து
தங்கமே வைரமே இளங்கிளியே குயிலே மயிலே
இது உண்மையடி

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே

ஊருக்கெல்லாம் பாக்கு வச்சு காத்திருப்பேன்
ஊரையெல்லாம் பாக்க வச்சு மணம் முடிப்பேன்
கூரச்சேல சரசரக்க அஞ்சி நடப்பேன்
கொண்டவனின் குணம் அறிந்து கொஞ்சி சிரிப்பேன்
அம்மம்மா செல்லம்மா இந்த மயக்கம் எனக்கும் பொறக்கும்
புது சுகமிருக்கும்

மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
மேளம் கொட்ட நேரம் வரும் பூங்கொடியே
ம்ம் ம்ம் ம்ம் ம்ம்ம் ம்ம் ம்ம்


படம்: லட்சுமி
ஆண்டு:1979
வரிகள்: ஆலங்குடி சோமு
குரல்: எஸ்.பி.சசிரேகா
இசை: இளையராஜா
பாத்திரம்: ஸ்ரீதேவி
இயக்கம்:

No comments:

Post a Comment