Thursday, October 29, 2009

அன்பே அமுதா

அன்பே அமுதா.. அன்பே
நீ பாலமுதா சுவை தேனமுதா
இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா
உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா
கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா

(அன்பே)

வளரும் பிறையும் தேயும் பிறையும்
வாழ சொல்வதை கேட்கின்றேன்
இரவு முழுதும் தூக்கம் இன்றி
எங்கும் உன்னை காண்கின்றேன்
கண்கள் எழுதும் கண்ணீர் கோலம்
உன்னை காட்டும் காவியம்
காலம் சென்றும் மனதில் என்றும்
வாழும் உந்தன் ஓவியம்

(அன்பே)

வாச மலரே பாச மலரே
வஞ்சி மலரே வாராயோ
ஆசை மலரில் மாலை தொடுத்து
அள்ளி எடுத்து தாராயோ
காதல் தெய்வம் மௌனம் ஆனால்
கன்னி தமிழும் வாடுமே
ஊரில் கேட்கும் மேள தாளம்
நம்மை இணைக்கும் நாதமே


- திரைப்படம்: அன்பே அமுதா?

Tuesday, October 27, 2009

நான் நேத்து பறித்த ரோஜா

நேத்து பறிச்ச ரோஜா, நான் பாத்து பறிச்ச ரோஜா
...
கரையில் நிந்கும் நாணல் கண்ணீர் சிந்தலாமா?
...
கொட்டும் மலர்கள் கட்டித் தந்தோம் பச்சைக் கிளியொன்று
கண்போல் என்றும் காத்திட வேண்டும் கருணை மனம்கொண்டு
மஞ்சள் பூசும் பெண்ணும் மைவிளையாடும் கண்ணும்
என்றும் உன்னுடன் வாழ்க மங்கல மங்கையாக
மங்கல மங்கையாக

- கண்ணதாசன், பிராப்தம், 1971

நோய் உடலிலா, மனதிலா

தேவனே என்னைப் பாருங்கள்
...
நோய் உடலிலா? மனதிலா? தேவனே!
- கண்ணதாசன், ஞான ஒளி

Sunday, October 25, 2009

இடை நினைத்தொரு கடை விரித்தனை ஏன் கண்களே?

இடை நினைத்தொரு கடைவிரித்தனை ஏன்கண்களே?
இலை மறைத்தொரு பழம்பழுத்தது ஏன்நெஞ்சமே?
சிறை எடுத்தொரு சிலைஅணைத்திட நாள்வந்தததோ?
இனித்த செங்கனி சுவைப்பதற்கோர் ஆள்வந்ததோ?

- கண்ணதாசன், 1967, மான் என்று பெண்ணுக்கொரு,  அனுபவி ராஜா அனுபவி

காக்கை குருவி எங்கள் ஜாதி

அந்தக் காலத்தில் புதுவைக் கடலோரம்,
மகாகவியின் எண்ண அலைகள்:

காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்

- ஜெய பேரிகை, பாரதி ஞானப் பாடல்கள்


நன்றி:

பாரதியின் கவிதைகளின் வலைப்பதிவு

http://enbharathi.blogspot.com

http://enbharathi.blogspot.com/2009/04/2_24.html





ஞானப் பாடல்கள் 2. ஐய பேரிகை ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா ஐய பேரிகை கொட்டடா!
1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்; வியனுல கனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம் (ஐயபேரிகை) 2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி இன்னமு தினையுண்டு களித்தோம்; கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம். (ஐயபேரிகை) 3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்.

vaanambaadi at wordpress.com - தமிழ் திரைப்பட கவிதைகள்

அற்புதமான புதையல் - மணியான பல தமிழ் திரைப்பாடல்களின் வரிகளை பதிவு செய்திருக்கிறது

http://vanampaadi.wordpress.com/

Quote from the site

“vanampaadi”- a site  exclusively for lyrics of Tamil film songs.Find here exceedingly greater number of Old Tamil Film Songs.Nevertheless, one may find some of my favourite hindi and mallu songs lyrics hither and thither.Currently, we have more than 800 lyrics and still lot to be stowed.
Just a few words of appreciation from you will be a valuable asset.Besides  it will add a remarkable degree of magnitude in my campaign to add further more lyrics.