Thursday, October 29, 2009

அன்பே அமுதா

அன்பே அமுதா.. அன்பே
நீ பாலமுதா சுவை தேனமுதா
இல்லை பாற்கடல் பிறந்த கனியமுதா
உந்தன் சொல்லமுதா இதழ் சுவையமுதா
கொஞ்சம் நில் அமுதா அதை சொல் அமுதா

(அன்பே)

வளரும் பிறையும் தேயும் பிறையும்
வாழ சொல்வதை கேட்கின்றேன்
இரவு முழுதும் தூக்கம் இன்றி
எங்கும் உன்னை காண்கின்றேன்
கண்கள் எழுதும் கண்ணீர் கோலம்
உன்னை காட்டும் காவியம்
காலம் சென்றும் மனதில் என்றும்
வாழும் உந்தன் ஓவியம்

(அன்பே)

வாச மலரே பாச மலரே
வஞ்சி மலரே வாராயோ
ஆசை மலரில் மாலை தொடுத்து
அள்ளி எடுத்து தாராயோ
காதல் தெய்வம் மௌனம் ஆனால்
கன்னி தமிழும் வாடுமே
ஊரில் கேட்கும் மேள தாளம்
நம்மை இணைக்கும் நாதமே


- திரைப்படம்: அன்பே அமுதா?

No comments:

Post a Comment