Sunday, October 25, 2009

காக்கை குருவி எங்கள் ஜாதி

அந்தக் காலத்தில் புதுவைக் கடலோரம்,
மகாகவியின் எண்ண அலைகள்:

காக்கை குருவி எங்கள் ஜாதி
நீள்கடலும் மலையும் எங்கள் கூட்டம்
நோக்கும் திசையெலாம் நாமன்றி வேறில்லை
நோக்க நோக்க களியாட்டம்

- ஜெய பேரிகை, பாரதி ஞானப் பாடல்கள்


நன்றி:

பாரதியின் கவிதைகளின் வலைப்பதிவு

http://enbharathi.blogspot.com

http://enbharathi.blogspot.com/2009/04/2_24.html





ஞானப் பாடல்கள் 2. ஐய பேரிகை ஐய பேரிகை கொட்டடா!-கொட்டடா ஐய பேரிகை கொட்டடா!
1. பயமெனும் பேய்தனை யடித்தோம்-பொய்ம்மைப் பாம்பைப் பிளந்துயிரைக் குடித்தோம்; வியனுல கனைத்தையும் அமுதென நுகரும் வேத வாழ்வினைக் கைப் பிடித்தோம் (ஐயபேரிகை) 2. இரவியினொளியிடைக் குளித்தோம்-ஒளி இன்னமு தினையுண்டு களித்தோம்; கரவினில் வந்துயிர்க் குலத்தினை யழிக்கும் காலன் நடுநடுங்க விழித்தோம். (ஐயபேரிகை) 3. காக்கை குருவி எங்கள் ஜாதி-நீள் கடலும் மலையும் எங்கள் கூட்டம்; நோக்குந் திசையெலாம் நாமன்றி வேறில்லை; நோக்க நோக்கக் களியாட்டம்.

No comments:

Post a Comment