Sunday, November 29, 2009

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனை

51. அச்சோப் பதிகம் - அனுபவவழி அறியாமை

(தில்லையில் அருளியது)

முத்திநெறி அறியாத மூர்க்கரொடு முயல்வேனைப்
பத்திநெறி அறிவித்துப் பழவினைகள் பாறும்வண்ணம்
சித்தமலம் அறுவித்துச் சிவமாக்கி எனைஆண்ட
அத்தனெனக் கருளியவா றார்பெறுவார் அச்சோவே. 650

நெறியல்லா நெறிதன்னை நெறியாக நினைவேனைச்
சிறுநெறிகள் சேராமே திருவருளே சேரும்வண்ணம்
குறியொன்றும் இல்லாத கூத்தன்தன் கூத்தையெனக்கு
அறியும்வண்ணம் அருளியவா றார்பெறுவார் அச்சோவே. 651

-  மாணிக்கவாசகர், திருவாசகம்,
see
http://projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0003_02.html

Saturday, November 28, 2009

அற்றது பற்றெனில் உற்றது வீடு

அற்றது பற்றெனில் உற்றது வீடு

2806
அற்றது பற்றெனில்--உற்றது வீடுஉயிர்
செற்றது மன்னுறில்--அற்றிறை பற்றே. 1.2.5

2807
பற்றில னீசனும்--முற்றவும் நின்றனன்
பற்றிலை யாய் அவன்--முற்றி லடங்கே. 1.2.6

2808
அடங்கெழில் சம்பத்து--அடங்கக்கண்டு ஈசன்
அடங்கெழி லஃதென்று--அடங்குக வுள்ளே. 1.2.7


2809
உள்ள முரைசெயல்--உள்ளவிம் மூன்றையும்
உள்ளிக் கெடுத்து இறை--யுள்ளிலொ டுங்கே. 1.2.8

2810
ஒடுங்க அவன்கண்--ஒடுங்கலு மெல்லாம்
விடும்பின்னு மாக்கை--விடும்பொழு தெண்ணே. 1.2.9

2811
எண்பெருக் கந்நலத்து--ஒண்பொரு ளீறில
வண்புகழ் நாரணன்--திண்கழல் சேரே. (2) 1.2.10

2812
சேர்த்தடத் தென்குரு--கூர்ச்ட கோபன்சொல்
சீர்த்தொடை யாயிரத்து--ஓர்த்தவிப் பத்தே. (2) 1.2.11 

- திருவாய்மொழி, நம்மாழ்வார்
Ref
http://www.projectmadurai.org/pm_etexts/utf8/pmuni0008_01.html

Thursday, November 26, 2009

mgrsongs.blogspot.com

Excellent page with lyrics in Tamil for  a lot of MGR songs

http://mgrsongs.blogspot.com/

Wednesday, November 25, 2009

Whatever We Think About

Whatever we Think about, Thank about, we Bring about

- Quoted by Praba on 90.1FM, itsdiff.com, Stanford Radio, on 11/25/09, Thanksgiving Special

Tuesday, November 24, 2009

அம்மாடி பொன்னுக்கு தங்க மனசு

அம்மாடி பொன்னுக்கு தங்க மனசு
பொங்குது சின்ன மனசு
கண்ணுக்கு நூறு வயசு
அவ சொல்லுக்கு நாலு வயசு

- கண்ணதாசன், 1970,  ராமன் எத்தனை ராமனடி

Monday, November 23, 2009

காறைபூணும் கண்ணாடிகாணும்

ஐயபுழுதி உடம்பளைந்து  இவள்பேச்சு மலந்தலையாய்
செய்யநூலின் சிற்றாடை செப்பனடுக்கவும் வல்லளல்லள்
கையினில் சிறுதூதையோடு  இவள்முற்றில் பிரிந்துமிலள்
பையரவணைப் பள்ளியானோடு கைவைத்து இவள்வருமே

பொங்குவெண் மணல்கொண்டு சிற்றிலும் முற்றத்திழைக்கலுறில்
சங்குசக்கரம் தண்டுவாள்  வில்லுமல்லது   இழைக்கலுறால்
கொங்கை இன்னம் குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை
சங்கையாகி என்னுள்ளம்  நாள்தொறும் தட்டுளுப்பாகின்றதே

காறைபூணும் கண்ணாடிகாணும்  தன்கையில் வளைகுலுக்கும்
கூறையுடுக்கும் அயர்க்கும்  தங்கொவ்வைச் செவ்வாய்திருத்தும்
தேறித்தேறிநின்று  ஆயிரம்பேர்த் தேவன்திறம் பிதற்றும்
மாறில்மாமணி வண்ணன்மேல்  இவள்மாலுறுகின்றாளே

- பெரியாழ்வார்

Sunday, November 22, 2009

பெண்மை அரசு

நாற்குணமும் நாற்படையா வைம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்குஞ் சிலம்பே யணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை யரசு.

- நளவெண்பா

Luck

Be ready when opportunity comes...
Luck is when preparation and opportunity meet
- Roy D. Chapin Jr

Wednesday, November 18, 2009

மாதா உடல் சலித்தாள்

மாதா உடல் சலித்தாள்; வல்வினையேன் கால் சலித்தேன்
வேதாவும் கை சலித்து விட்டானே -நாதா
இருப்பையூர் வாழ் சிவனே, இன்னுமோர் அன்னை
கருப்பையூர் வாராமற் கா!- பட்டினத்தார்

மண்ணும் தணலாற வானும் புகையாற

மண்ணும் தணலாற வானும் புகையாற
எண்ணற்ற  தாய்மார் இளைப்பாற
பண்ணும் அயன் கையாறவும்
காலன் காலாறவும் கண்பார்
ஐயா திரு ஐயாறா

- பட்டினத்தார்
கிருபானந்தா வாரியாரின் "பட்டினத்தார்" ஒலி நாடாவிலிருந்து

Monday, November 16, 2009

ஓரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு

ஓரு தங்க ரதத்தில்
பொன் மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த....
என் தெய்வம் தந்த
என் தங்கை

செம்மண்ணிலே தண்ணீரை போல்
உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியை போல்
ஒன்றான பந்தம் இது
தங்கையல்ல....
தங்கையல்ல
தாயானவள்
கோடி பாடல் நான் பாட பொருளானாள்

கண்ணீரினால் நீராட்டினால்
என் ஆசை தீராதம்மா
முன்னூறு நாள் தாலாட்டினால்
என் பாசம் போகாதம்மா
என் ஆலயம்
பொன் கோபுரம்
ஏழேழு ஜன்மங்கள் ஆனலும் மாறாதம்மா

ராஜாவை நான்
ராஜாத்திக்கு
துணையாக பார்ப்பேனம்மா
தேவர்களின் பல்லாக்கிலே
ஊர்கோலம் வைப்பேனம்மா
மனமங்கலம்
திரு குங்குமம்
வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவென்

- கண்ணதாசன், 1979, தர்ம யுத்தம்

இசை: இளையராஜா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
இயக்குநர்:  R.C. சக்தி
நடிப்பு: ரஜினி, ஸ்ரீதேவி

Sunday, November 15, 2009

தை மாத மேகம் அது தரையில் ஆடுது - ஆண்குரல்

தை மாத மேகம்
தரினோம் தரினோம் தரினோம்
மேகம்
தரினனனா
மேகம் மேகம் மேகம் ஹோய்

தை மாத மேகம் அது தரையில் ஆடுது
தை மாத மேகம் அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் இந்த நிலவு பாடுது

போடு
தை மாத மேகம் அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் இந்த நிலவு பாடுது
தை மாத மேகம் அது தரையில் ஆடுது

மாலை இல்லை மேளம்இல்லை
உறவு வந்தது
மனைவி இல்லை கர்ப்பம் இல்லை
முழந்தை வந்தது
ராகம் வேறு தாளம் வேறு
பாட்டு வந்தது
ஞானம் இல்லை என்ற போதும்
பேச்சு வந்தது

மாலை இல்லை மேளம்இல்லை
உறவு வந்தது 
ஹாஹா
மனைவி இல்லை கர்ப்பம் இல்லை
முழந்தை வந்தது


இரவினிலே கடவுள் ஐயா
ஏற்றி வைத்தார் இந்த
நிலா விளக்கு
ஹாஹா
அம்புலி அம்புலி
புள்ளய பாரு
அழகு புள்ளய பாரடியோ
ஹாஹா
அழகு புள்ளய உங்கிட்ட
விட்டா எங்களுக்கேது கூறடியோ
கொம்பு காளைகள் பூட்டி வளர்த்த
கன்னு குட்டிய பாரடியோ
ஹாஹா
கன்னுக்குட்டிக்கு பால்கொடுக்க
உன்னால் ஆகுமா கூறடியோ
இரவினிலே கடவுள் ஐயா
ஏற்றி வைத்தார் இந்த
நிலா விளக்கு

நீ பொண்ணாக பொறந்தாயே
நிலவே
பொண்ணாக பொறந்தாயே
ஒருத்தன் பொண்டாட்டியானாயோ
ஒருத்தன் பொண்டாட்டியாகாமே
குழந்தைக்கு நீ தாயாகுமோ

நீ பொண்ணாக பொறந்தாயே
நிலவே
பொண்ணாக பொறந்தாயே
ஒருத்தன் பொண்டாட்டியானாயோ
ஒருத்தன்  பொண்டாட்டியாகாமே
குழந்தைக்கு நீ தாயாகுமோ
இந்த குழந்தைக்கு நீ தாயாகுமோ

 (அடுத்த 3 வரிகள் வார்த்தை தெரியவில்லை)

- கண்ணதாசன், 1968, குழந்தைக்காக
இசை:  MSV
பாடியவர்கள்:

கண்ணதாசன் கண்ணதாசன் தான்.

கண்ணதாசன் பாட்டில் ஆடும்
வானையும் நிலவையும்
மேகத்தையும் மேகவண்ணனையும்
வியந்து வணங்கும் மின்னல்

தை மாத மேகம் அது தரையில் ஆடுது

தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் வெண்ணிலவே பாடுது..
நிலவே பாடுது

முத்து ரதம் ஏறும் நிலவுக்கு நாங்கள்
கொட்டி வைத்த வைரம் நட்சத்திரமாக
பூமாலை வெண்மேகமே

தை மாத மேகம்
அது தரையில் ஆடுது

இரவினில் கடவுள் ஏற்றிய விளக்கு
எல்லோர்க்கும் குல விளக்கு
இரவினில் கடவுள் ஏற்றிய்
உயரத்தில் இருந்தே உலகத்தைக் காக்கும்
கல்யாணத் திருவிளக்கு
அழுகின்ற குழந்தை காணும் கண் காட்சி
அம்மா வெண்ணிலவில் அரசாட்சி
குற்றம் புரிவோர்கள் கண்டு கொள்ளும் சாட்சி
நல்லோர்கள் நெஞ்சில் உள்ள மனசாட்சி

தை மாத மேகம்
அது தரையில் ஆடுது

பாலுக்கு வெண்மை படைத்தவன் எவனோ
பாப்பாவைப் படைத்தவன் அவன் தானே
பாப்பாவைப் படைத்த கைகளினாலே
பால் போன்ற நிலவைப் படைத்தானே

முத்து ரதம் ஏறும் நிலவுக்கு நாங்கள்
கொட்டி வைத்த வைரம் நட்சத்திரமாக
பூமாலை வெண்மேகமே

தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் வெண்ணிலவே பாடுது..
நிலவே பாடுது

- கண்ணதாசன், 1968, குழந்தைக்காக

பாடல்: தை மாத மேகம்
திரைப் படம்: குழந்தைக்காக
பாடியவர்: பீ.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்

தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே

ராமன் என்பது கங்கை நதி...
அல்லா என்பது சிந்து நதி...
யேசு என்பது பொன்னி நதி...
யேசு என்பது பொன்னி நதி...

நதிகள் பிறக்குமிடம் பலவாகும்
எல்லா நதியும் கலக்குமிடம் கடலாகும்..

தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே -என்னை
தேடி தேடி காவல் கொண்டான் மழலை மொழியிலே
பாப்பா  தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா

அன்னை மேரி தெய்வ பாலன்
எங்கள் யேசு தேவ  தூதன்
ராஜ சபை ஜோதி கண்டேன்
ஞான கோவில் தீபம் கண்டேன்
பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா

ஆல்லாஹு அக்பர் என்றேன்
ஆண்டவரே அடிமை என்றேன்
பிள்ளை ஒன்றை பேச சொன்னார்
எல்லாமும் இதுதான் என்றார்
பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா

வேணு கான ஓசை கேட்டேன்
விஜயன் கேட்ட கீதை கேட்டேன்
தேரில் வந்த கண்ணன் கண்டேன்
கண்ணனென்னும் ராமன் கண்டேன்
பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா
பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா

(தேவன்)
- கண்ணதாசன், 1968, குழந்தைக்காக
- முதல் முதலாக திரைப்பாடலுக்கு  தேசிய விருதை வென்ற படம் (1969)

படம் : குழந்தைக்காக
பாடியர்வர்கள்: சீர்காழி, TMS, PBS
கவிதை: கண்ணதாசன்
இசை: MSV

Thursday, November 12, 2009

ஆறுமுகமும் பன்னிரு கரமும்

மாயிருள் ஞாலம் மறுவின்றி விளங்கப்
பல்கதிர் விரிந்தன்று ஒருமுகம்;ஒருமுகம்,
ஆர்வலர் ஏத்த அமர்ந்தினி தொழுகிக்
காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே;ஒருமுகம்,
மந்திர விதியின் மரபுளி வழாஅ
அந்தணர் வேள்விஓர்க் கும்மே;ஒருமுகம்,
எஞ்சிய பொருள்களை ஏமுற நாடித்
திங்கள் போலத் திசைவிளக் கும்மே;ஒருமுகம்,
செறுநர்த் தேய்த்துச் செல்சமம் முருக்கிக்
கறுவுகொள் நெஞ்சமொடு களம்வேட் டன்றே;ஒருமுகம் . .100


பன்னிரு கைகள்:

விண்செலல் மரபின் ஐயர்க்கு ஏந்தியது
ஒருகை; உக்கம் சேர்த்தியது ஒருகை;
நலம்பெறு கலிங்கத்துக் குறங்கின்மிசை அசைஇயதொருகை;
அங்குசங் கடாவ ஒருகை, இருகை . . . .110

ஐயிரு வட்டமொடு எ·குவலந் திரிப்ப,
ஒருகை மார்பொடு விளங்க ஒருகை
ஒருகை தாரொடு பொலிய, ஒருகை
கீழ்வீழ் தொடியடு மீமிசைக்கொட்ப, ஒருகை
பாடின் படுமணி இரட்ட, ஒருகை
நீனிற விசும்பின் மலிதுளி பொழிய, ஒருகை
வானர மகளிர்க்கு வதுவை சூட்ட,
ஆங்குஅப் பன்னிரு கையும் பாற்படஇயற்ற,
அந்தரப் பல்லியம் கறங்கத் திண்காழ்
வயிர்எழுந் திசைப்ப, வால்வளை ஞரல, . . . .120


- திருமுருகாற்றுப்படை,  கி.பி 200?


மங்கையரின் குங்குமத்தைக் காக்கும் முகம் ஒன்று
வாடுகின்ற ஏழைகளைக் காணும் முகம் ஒன்று
சஞ்சலத்தில் வந்தவரைத் தாங்கு முகம் ஒன்று
ஜாதி மத பேதமின்றிப் பார்க்கும் முகம் ஒன்று
நோய் நொடிகள் தீர்த்து வைக்கும் வண்ண முகம் ஒன்று
நூறு முகம் காட்டுதம்மா ஆறுமுகம் இன்று ஆறுமுகம் இன்று


- கண்ணதாசன், 1972, தெய்வம்(திரைப்படம்)

தாழை விருந்து - குற்றாலக் குறவஞ்சி

(3) சூழ மேதி இறங்குந் துறையிற்



சொரியும் பாலைப் பருகிய வாளை
கூழை வாசப் பலாவினிற் பாயக்
கொழும் பலாக்கனி வாழையிற் சாய
வாழை சாய்ந்தொரு தாழையிற் றாக்க
வருவி ருந்துக் குபசரிப் பார்போல்
தாழை சோறிட வாழை குருத்திடுஞ்
சந்திர சூடர்தென் னாரிய நாடே.

- குற்றாலக் குறவஞ்சி

Saturday, November 7, 2009

வெள்ளத்தால் போகாது,

வெள்ளத்தால் போகாது, வெந்தணலால் வேகாது
வேந்தராலும்  கொள்ளத்தான் இயலாது,
கொடுத்தாலும் நிறைவொழிய குறைபடாது
கள்வர்க்கோ மிக அரிது, காவலோ மிக எளிது..