தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் வெண்ணிலவே பாடுது..
நிலவே பாடுது
முத்து ரதம் ஏறும் நிலவுக்கு நாங்கள்
கொட்டி வைத்த வைரம் நட்சத்திரமாக
பூமாலை வெண்மேகமே
தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
இரவினில் கடவுள் ஏற்றிய விளக்கு
எல்லோர்க்கும் குல விளக்கு
இரவினில் கடவுள் ஏற்றிய்
உயரத்தில் இருந்தே உலகத்தைக் காக்கும்
கல்யாணத் திருவிளக்கு
அழுகின்ற குழந்தை காணும் கண் காட்சி
அம்மா வெண்ணிலவில் அரசாட்சி
குற்றம் புரிவோர்கள் கண்டு கொள்ளும் சாட்சி
நல்லோர்கள் நெஞ்சில் உள்ள மனசாட்சி
தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
பாலுக்கு வெண்மை படைத்தவன் எவனோ
பாப்பாவைப் படைத்தவன் அவன் தானே
பாப்பாவைப் படைத்த கைகளினாலே
பால் போன்ற நிலவைப் படைத்தானே
முத்து ரதம் ஏறும் நிலவுக்கு நாங்கள்
கொட்டி வைத்த வைரம் நட்சத்திரமாக
பூமாலை வெண்மேகமே
தை மாத மேகம்
அது தரையில் ஆடுது
அது தேடும் அந்த வானில் வெண்ணிலவே பாடுது..
நிலவே பாடுது
- கண்ணதாசன், 1968, குழந்தைக்காக
பாடல்: தை மாத மேகம்
திரைப் படம்: குழந்தைக்காக
பாடியவர்: பீ.சுசீலா
இசை: எம்.எஸ்.விஸ்வனாதன்
Sunday, November 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment