ராமன் என்பது கங்கை நதி...
அல்லா என்பது சிந்து நதி...
யேசு என்பது பொன்னி நதி...
யேசு என்பது பொன்னி நதி...
நதிகள் பிறக்குமிடம் பலவாகும்
எல்லா நதியும் கலக்குமிடம் கடலாகும்..
தேவன் வந்தான் தேவன் வந்தான் குழந்தை வடிவிலே -என்னை
தேடி தேடி காவல் கொண்டான் மழலை மொழியிலே
பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா
அன்னை மேரி தெய்வ பாலன்
எங்கள் யேசு தேவ தூதன்
ராஜ சபை ஜோதி கண்டேன்
ஞான கோவில் தீபம் கண்டேன்
பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா
ஆல்லாஹு அக்பர் என்றேன்
ஆண்டவரே அடிமை என்றேன்
பிள்ளை ஒன்றை பேச சொன்னார்
எல்லாமும் இதுதான் என்றார்
பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா
வேணு கான ஓசை கேட்டேன்
விஜயன் கேட்ட கீதை கேட்டேன்
தேரில் வந்த கண்ணன் கண்டேன்
கண்ணனென்னும் ராமன் கண்டேன்
பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா
பாப்பா தெய்வ பாப்பா பாசம் பொங்கும் பாப்பா
(தேவன்)
- கண்ணதாசன், 1968, குழந்தைக்காக
- முதல் முதலாக திரைப்பாடலுக்கு தேசிய விருதை வென்ற படம் (1969)
படம் : குழந்தைக்காக
பாடியர்வர்கள்: சீர்காழி, TMS, PBS
கவிதை: கண்ணதாசன்
இசை: MSV
Sunday, November 15, 2009
Subscribe to:
Post Comments (Atom)
Sema song 2024 LA ketan
ReplyDelete