ஐயபுழுதி உடம்பளைந்து இவள்பேச்சு மலந்தலையாய்
செய்யநூலின் சிற்றாடை செப்பனடுக்கவும் வல்லளல்லள்
கையினில் சிறுதூதையோடு இவள்முற்றில் பிரிந்துமிலள்
பையரவணைப் பள்ளியானோடு கைவைத்து இவள்வருமே
பொங்குவெண் மணல்கொண்டு சிற்றிலும் முற்றத்திழைக்கலுறில்
சங்குசக்கரம் தண்டுவாள் வில்லுமல்லது இழைக்கலுறால்
கொங்கை இன்னம் குவிந்தெழுந்தில கோவிந்தனோடுஇவளை
சங்கையாகி என்னுள்ளம் நாள்தொறும் தட்டுளுப்பாகின்றதே
காறைபூணும் கண்ணாடிகாணும் தன்கையில் வளைகுலுக்கும்
கூறையுடுக்கும் அயர்க்கும் தங்கொவ்வைச் செவ்வாய்திருத்தும்
தேறித்தேறிநின்று ஆயிரம்பேர்த் தேவன்திறம் பிதற்றும்
மாறில்மாமணி வண்ணன்மேல் இவள்மாலுறுகின்றாளே
- பெரியாழ்வார்
Monday, November 23, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment