Monday, November 16, 2009

ஓரு தங்க ரதத்தில் பொன் மஞ்சள் நிலவு

ஓரு தங்க ரதத்தில்
பொன் மஞ்சள் நிலவு
என் தெய்வம் தந்த....
என் தெய்வம் தந்த
என் தங்கை

செம்மண்ணிலே தண்ணீரை போல்
உண்டான சொந்தம் இது
சிந்தாமணி ஜோதியை போல்
ஒன்றான பந்தம் இது
தங்கையல்ல....
தங்கையல்ல
தாயானவள்
கோடி பாடல் நான் பாட பொருளானாள்

கண்ணீரினால் நீராட்டினால்
என் ஆசை தீராதம்மா
முன்னூறு நாள் தாலாட்டினால்
என் பாசம் போகாதம்மா
என் ஆலயம்
பொன் கோபுரம்
ஏழேழு ஜன்மங்கள் ஆனலும் மாறாதம்மா

ராஜாவை நான்
ராஜாத்திக்கு
துணையாக பார்ப்பேனம்மா
தேவர்களின் பல்லாக்கிலே
ஊர்கோலம் வைப்பேனம்மா
மனமங்கலம்
திரு குங்குமம்
வாழ்க என்று பல்லாண்டு நான் பாடுவென்

- கண்ணதாசன், 1979, தர்ம யுத்தம்

இசை: இளையராஜா
பாடியவர்: மலேசியா வாசுதேவன்
இயக்குநர்:  R.C. சக்தி
நடிப்பு: ரஜினி, ஸ்ரீதேவி

1 comment: